தொழிலதிபர் கொடுத்த வழக்கில் சிக்கிய ஹாலிவுட் நடிகை!! மறுப்பு தெரிவித்த ஷில்பா!

By : G Pradeep
ஹாலிவுட் திரைப்பட உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவரான ராஜ் குந்த்ரா ஆகிய இருவர் மீதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் ஏதும் மும்பை போலீசார் லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.
இதன் பின்னணி என்னவென்று பார்த்தால், பிரபல தொழிலதிபரான தீபக் கோத்தாரி என்பவரிடமிருந்து 2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யப் போவதாக கூறி பணத்தை பெற்று தங்களுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தி வந்ததாக தொழில் அதிபர் தீபக் கூறுகிறார்.
முதலீடு செய்த பணத்தை 12% வட்டியுடன் விரைவில் கொடுப்பதாக கூறி ஷில்பா ஷெட்டி உத்தரவாதம் அளித்த நிலையில் சில மாதங்களிலேயே நிறுவனத்தின் இயக்குனர் பகுதியை ராஜினாமா செய்ததாகவும், பிறகு நிறுவனத்திற்கு எதிராக ரூ. 1.28 கோடி திவால் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் தொழிலதிபர் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு செல்லாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதற்காக செய்யும் செயல் என்று ஷில்பா மற்றும் அவரது கணவர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
