இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர போகும் பிரதமர் மோடி!! இதுதான் காரணமா?

By : G Pradeep
நெல்லையில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதில் அமித்ஷா பங்கேற்பில் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி பாஜகவின் அடுத்த பூத்கமிட்டி மாநாடு மதுரையில் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து எந்த மாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறப் போகிறது என்ற அறிவிக்கை வெளியாக்கியது.
அதன்படி வரும் அக்.26ஆம் தேதி கோவையிலும், நவம்பர் 23ல் சேலம், டிசம்பர் 21ல் தஞ்சாவூர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 4ல் திருவண்ணாமலை என தொடர்ச்சியாக அடுத்தடுத்து திருவள்ளூர் மற்றும் சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. ஏற்கனவே நெல்லை மாநாட்டில் அமித்ஷா பங்கேற்று நடந்து முடிந்த நிலையில் அடுத்தடுத்து நடக்க உள்ள பூத் கமிட்டி மாநாடுகளில் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்த மாநாட்டில் அதிமுக உட்பட கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. மாநாட்டை பாஜக தேசிய தலைவரும் மற்றும் குடியரசு தலைவரும் தேர்தல் முடிந்த பிறகு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக நடத்தப்படும் மாநாடுகளுக்கு பிரதமர் மோடியை பங்கேற்க வைப்பதற்காக இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இனி அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் எந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
