வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்!! மக்கள் அளித்த மனுக்களுக்கு இதுதான் முடிவா?

By : G Pradeep
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வைகை ஆற்றல் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மிதந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆற்றல் மிதந்து வந்த மனுக்களை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து கண்டனம் வெளியிட்டனர்.
இந்நிலையில் சிவகங்கை கோட்டாட்சியர் சிவக்குமார் நடத்திய விசாரணையில் திருப்புவனம் வட்டாட்சியரான விஜயகுமாரை இடமாற்றம் செய்தும் அலட்சியமாக பணியாற்றிய ஏழு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 13 பட்டா மாறுதலுக்கான மனுவை மர்ம நபர்கள் திருடி சென்றதாக திருப்புவனம் போலீசாரிடம் வழக்கு பதிவு செய்ததாக வட்டாட்சியர் கூறினார்.
ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்தவித சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படாததால் திருடி சென்றவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு சற்று கடினமாக உள்ளது. புல உதவியாளரான பாண்டியனை பணிநீக்கம் செய்யவும் வட்டாட்சியர் கூறியதாக தகவல் வெளியாக்கியது. போலீஸ் விசாரணை முழுமையாக முடிவடையாத நிலையில் இது போன்று நில அளவை தொழிலாளர்களை பழிகடாகும் வகையில் புகார்கள் எழுந்து வருகிறது.
எனவே போலீஸ் விசாரணை முழுமையாக முடிவடையும் வரையில் மீது நடவடிக்கை எடுப்பது நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் ஆற்றில் மிதந்ததிற்கான காரணத்தை விரைவில் போலீசார் கண்டறிய வேண்டும்.
