Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்திலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தகவல் அளித்த இளைஞர் கைது!!

தமிழகத்திலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தகவல் அளித்த இளைஞர் கைது!!
X

G PradeepBy : G Pradeep

  |  11 Sept 2025 11:23 AM IST

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஹ்லத்தூர் முகமது அக்லிக் முஜாஹித் என்ற 22 வயதுடைய இளைஞர் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரை உள்ளூர் போலீசார் மற்றும் தமிழக தீவிரவாத தடுப்பு படையினரும் சேர்ந்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த நபரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து அவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக நடக்கப் போகும் விசாரணை தேச பாதுகாப்பிற்காக இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரித்து வந்தனர்.

இந்த நபர் சமூக ஊடகங்களை பயன்படுத்தி சிரியா, பாகிஸ்தான் போன்ற போன்ற நாடுகளில் இருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு இருப்பதாகவும், ககவே தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்தது. அது மட்டுமல்லாமல் இந்திய அரசிற்கு எதிராக இளைஞர்களை செயல்பட வைக்கும் விதத்தில் பேசி இது போன்ற விஷயங்களில் ஈடுபட வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பீகார் உத்திர பிரதேசம் கர்நாடகா போன்ற இடங்களில் மட்டுமல்லாமல் தமிழகம் உட்பட 21 இடங்களில் இந்தக் குழுக்களில் இருக்கும் உறுப்பினர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி ஒரே நேரத்தில் சோதனை செய்ததில் அங்கிருந்தவர்களில் சில சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News