தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்!! இதற்கு என்ன தான் தீர்வு?

By : G Pradeep
சென்னையில் தூய்மை பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சியை ஒப்படைத்தது தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது மட்டுமல்லாமல், தூய்மை பணியாளர்களை பணி நியமனம் செய்யக்கோரி ரிப்பன் மாளிகை முன்பாக இந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடர்ச்சியாக 13 நாட்கள் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் அனைவரையும் போலீசார் குண்டுகட்டாக தூக்கி இரவோடு இரவாக கைது செய்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மே தினப் பூங்காவில் திடீரென்று 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்தனர் அவர்களையும் அந்த இடத்தை விட்டு போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர்.
மேலும் அம்பேத்கர் நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈடுபட்ட தூய்மையாளர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் உட்பட 200-க்கும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நள்ளிரவு ஒரு மணி அளவில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கிருந்தும் அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர் ஒருவர் அளித்த பேட்டியில் சமீபத்தில் முதல்வருக்கு நன்றி கூறுவதாக மேற்பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தவர்கள் தூய்மை பணியாளர்கலே இல்லை என்று கூறியிருந்தார். இரண்டு மாதங்களாக தங்களுக்கு வேலையே இல்லை என்றும், எங்களுடைய வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறி விரைவில் முதலமைச்சர் எங்களை சந்தித்து பிரச்சனைக்கு முடிவு தர வேண்டும் கூறினர்.
