மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க வேண்டும்!! போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!!

By : G Pradeep
தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கறிஞர் முனீஸ்வரன் தலைமையில் வழக்கறிஞர்களான ராஜா நாகராஜா, மணிகண்டன்என பல வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் உட்பட பல தொழிற்சாலைகள் மீண்டும் திறப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் உள்ளூரில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் மீண்டும் மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறந்து அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், அதனால் பல இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி பல சட்ட விரோதமான செயல்களை செய்து வருவதாக கூறினர். இது போன்ற இளைஞர்களின் செயல்களை நிறுத்த வேண்டும் என்றால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை உடனடியாகத் திறந்து அவர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைவில் எடுக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் கார் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் இந்தப் போராட்டத்தில் கூறப்பட்டது.
ஆனால் இந்தப் போராட்டம் குறித்து வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரான வாரியார் இந்த வழக்கறிஞர்கள் போராடும் போராட்டத்திற்கும் வழக்கறிஞர் சங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
