டெட் தேர்வு எழுத நினைக்கும் ஆசிரியர்களுக்கு இனி தடையே இல்லை!!

By : G Pradeep
நாடு முழுவதும் ஆசிரியர் பணியில் இருக்கும் அனைவரும் டெட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு வெளியிட்டது. இதனால் தமிழகத்தில் அரசு பணியில் இருக்கும் 1.5 ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று பலரும் கருதி வந்தனர்.
அதனால் பள்ளிக்கல்வித்துறை தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மறுசீராய்வு தாக்கல் செய்து தமிழக அரசு முடிவெடுத்தது. அதன் படி அரசு பணியில் இருப்பவர்கள் தங்களுடைய உயர் கல்விக்கோ அல்லது வேறு பணி தேர்வுகளை எழுதுவதற்கான தடையில்லா சான்று பெற வேண்டியும், டெட் தேர்வு எழுதுவதற்காக முதன்மை மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெட் தேர்வு எழுதுவதற்கு தடையில்லா சான்று பெற வேண்டியதில்லை என்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
எனவே டெட் தேர்வு எழுத விரும்பும் ஆசிரியர்கள் இனி தடையில்லா சான்று பெற வேண்டியதில்லை என்று தெள்ளத்தெளிவாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறப்பட்டது.
