விஏஒ அலுவலகத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?? அச்சத்தில் விழுப்புரம் மக்கள்!!

By : G Pradeep
விழுப்புரத்தில் இருக்கும் மயிலம் ஒன்றியத்தைச் சேர்ந்த செண்டூர் கிராமத்தில் அமைந்திருக்கக் கூடிய கிராம நிர்வாக அலுவலர் (வி ஏ ஓ) அலுவலகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக உள்ளூர் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களுடைய பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உட்பட அரசாங்கம் அளிக்கக்கூடிய திட்டங்கள், முதியோர் ஓய்வூதியம் தொகை மற்றும் பட்டா முதற்கொண்டு அனைத்திற்கும் விஏஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தை நீண்ட வருடங்களாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் மிகவும் சேதமடைந்த நிலையில் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் பல இடங்களில் கட்டிட கம்பி பார்க்கக்கூடிய அளவில் கட்டிடம் உதிர்ந்து போய் மேல்பகுதியில் செடி கொடிகள் வளர்ந்து கிடைக்கின்றது.
அது மட்டுமல்லாமல் விஏஓ அலுவலகரே இந்த கட்டிடத்திற்குள் உட்காருவதற்கு பயந்து கொண்டு வெளியில் கூரை அமைத்து மக்களிடம் சேவை செய்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக இந்த அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கவும், விரைவில் இந்த கட்டிடத்தை புதிதாக மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விஏஓ மற்றும் அங்குள்ள பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விரைவில் இந்த அலுவலகத்தின் கட்டிடத்திற்கு ஒரு தீர்வு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
