போலீஸ் விதித்த விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் நடந்து கொண்ட தாவெக தொண்டர்கள்!!

By : G Pradeep
சமீபத்தில் திருச்சியில் நடந்து முடிந்த தா.வெ.க வின் பிரச்சாரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது. இதனைத் தொடர்ந்து தாவெகாவின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் காவல்துறை விழித்திருந்த கட்டுப்பாடுகளை மீறியதாகவும் அதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி மரக்கடை பகுதியில் காலை 10.30 மணியிலிருந்து 11 மணி வரைக்கும் விஜய்க்கு பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 3:00 மணி வரைக்கும் பேசியது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பேசியதாக விஜய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் அவருடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜய் வாகனம் விமான நிலையத்தில் கிளம்பியதில் இருந்து மரக்கடைக்கு வரும் வலியெல்லாம் வாகனத்தை சுற்றிக்கொண்டு வாகனம் செல்ல விடாமல் நின்றிருந்ததும், ஈரமான சுவர்கள் மற்றும் மரங்கள் மீது ஏறக்கூடாது என்று விதிமுறைகள் போலீசார் விதித்திருந்தும் அதனை மீறியதாக கூறப்படுகிறது.
காலை 8:00 மணியிலிருந்து பிற்பகல் வரை விஜயை காண்பதற்காக வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வந்திருந்ததால் கூட்ட நெரிசலில் இதற்கு தண்ணீர் கூட இல்லாமல் மயக்கம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்பட்டு சிலர் பாதிப்புக்கு உள்ளாயினர்.
மேலும் அனுமதி பெறாமல் சில இடங்களில் பேனர் மற்றும் பிளக்ஸ் போன்றவற்றையும் அமைத்திருந்தது என பல விதிமீறல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
