Kathir News
Begin typing your search above and press return to search.

பழனி தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரை திரும்ப பெற தொடுக்கப்பட்ட வழக்கு! இறுதி விசாரணை ஒத்திவைப்பு!

பழனி தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரை திரும்ப பெற தொடுக்கப்பட்ட வழக்கு! இறுதி விசாரணை ஒத்திவைப்பு!
X

G PradeepBy : G Pradeep

  |  16 Sept 2025 12:25 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் செயல் அலுவலர் பணி நியமனம் செய்ததை தொடர்ந்து தொடர்ச்சியாக பல எதிர்ப்புகள் தோன்றி வருகிறது. இந்நிலையில் ஐகோர்ட்டில் டி ஆர் ரமேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ஆர் சுரேஷ் மற்றும் சௌந்தர் என்ற இரண்டு நீதிபதிகள் விசாரணை செய்தனர். அச்சமயத்தில் டி ஆர் ரமேஷ் ஆஜராகி பழனி கோவிலுக்கு செயல் அலுவலரை நியமனம் செய்தது செல்லுபடி ஆகாது என்றும் இந்து சமய அறநிலையத்துறை 40 கோவில்களை தமிழகம் முழுவதும் எடுத்துக்கொண்டு அவற்றிற்கு செயல் அலுவலகரை நியமித்து வருவது செல்லுபடி ஆகாது என்றும் தர்மபுர ஆதீனம் வழக்கில் கடந்த 1967இல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

அப்படி இருக்கும் சமயத்தில் பழனி கோவிலில் செயல் அலுவலகரை நியமிப்பது செல்லுபடி ஆகாது எனவும், அவரை கோவிலில் இருந்து வெளியேற ஹை கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இவ்வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதி மாற்றி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து டி ஆர் ரமேஷ் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் சிதம்பரம் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமித்தது செல்லுபடி ஆகாது என்று உத்தரவிட்டது. அதுபோலவே தற்பொழுது பழனி கோவிலிலும் அரசு செயல் அலுவலர் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News