வக்ஃபு சட்ட திருத்த மசோதா குறித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன??

By : G Pradeep
வக்ஃபு சட்டத்திருத்தம் மசோதா கடந்த ஆண்டில் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பு ஆண்டில் ஏப்ரல் 3ஆம் தேதி லோக்சபாவிலும், ஏப்ரல் நான்காம் தேதி ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் வக்ஃபு திருத்த சட்டம் என பெயர் பெற்றது. இந்த மசோதாவுக்கு பல எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு காட்டி நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களும் நடக்கப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து இந்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தீர்ப்பை மே 22ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இதற்கு எதிராக ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தற்பொழுது இடைக்கால உத்தரவு அளித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை முழுமையாக தடை செய்வதற்கு எந்தவித காரணங்களும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது சில விதிகள் அடிப்படை உரிமைகளை முரண்பட வைக்க வாய்ப்புண்டு என்றும், அது போன்ற பிரிவுகளை செயல்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டார். வக்ஃபு சொத்துக்களை அளிப்போர் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி இருக்க வேண்டும் என்றும்,வக்ஃபு சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்கு மாவட்ட கலெக்டருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்திற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
