Kathir News
Begin typing your search above and press return to search.

நர்ஸ்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்சனையா?? தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி!!

நர்ஸ்களுக்கு ஊதியம் வழங்குவதில் பிரச்சனையா?? தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி!!
X

G PradeepBy : G Pradeep

  |  18 Sept 2025 11:10 AM IST

தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் ஒப்பந்தம் அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் நர்ஸ்கள் வேலை பார்த்து வருகின்றனர். நிரந்தரமாக வேலையில் அமர்த்தப்படும் நர்ஸ்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால் இதுபோன்று ஒப்பந்த அடிப்படையில் நர்ஸ்களை நியமிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் நர்ஸ்கள் சங்கத்திலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சம வேலைக்கு, சம ஊதியம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரந்தர வேலையில் இருக்கும் நர்ஸ்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தையே ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் நர்ஸ்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டும் அதை தமிழக அரசு செயல்படுத்தாமல் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டபோது, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2000 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்நிலையில் தமிழக அரசு சார்பாக ஆஜரான வக்கீல் இந்தத் திட்டத்தில் மத்திய அரசையே தமிழ்நாடு சார்ந்து இருப்பதாகவும் அதற்காக 440 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு இன்னும் மத்திய அரசு வழங்காமல் இருப்பதாக கூறியதை தொடர்ந்து அதைக் கேட்டு கடுப்பான நீதிபதி எதற்கெடுத்தாலும் மத்திய அரசையே குறை கூறுவது வழக்கமாகிவிட்டது என்றும், இதற்காக தனியாக நீங்களே ஒரு சட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதானே.. உங்களுக்கு கீழ் வேலை செய்யும் நபர்களுக்கு நீங்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இலவசங்கள் வழங்குவதற்கு மட்டும் பணம் உள்ளது.. ஆனால் நர்ஸ்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு பணம் இல்லையா?? என்று கேள்வி எழுப்பினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News