Kathir News
Begin typing your search above and press return to search.

ஆயுத சண்டையை நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தைக்கு முன் வரும் மாவோ​யிஸ்ட்​கள்!!

ஆயுத சண்டையை நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தைக்கு முன் வரும் மாவோ​யிஸ்ட்​கள்!!
X

G PradeepBy : G Pradeep

  |  18 Sept 2025 1:36 PM IST

சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் போன்ற சில மாநிலங்களில் மாவோ​யிஸ்ட்​கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் மாவோ​யிஸ்ட்​கள் மொத்தமாக நாட்டில் ஒழிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் மற்றும் கோப்ரா கமாண்டோக்கள் போன்ற பல வீரர்கள் இணைந்து மாவோ​யிஸ்ட்​களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மத்திய அரசுக்கு செய்​தித் தொடர்​பாளர் அப்ஹே என்​பவர் அனுப்பிய கடிதம் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த கடிதத்தில் தங்களுடைய ஆயுதப் போராட்டம் ஒரு மாத கால அளவிற்கு நிறுத்தி வைப்பதாகவும், அரசு குழுவினருடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு வரப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும், இதில் போலீசார் தொந்தரவு இருக்கக் கூடாது என்றும் என்கவுண்டர் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சத்தீஸ்கர் அதிகாரிகள் மாவோ​யிஸ்ட்​கள் தற்பொழுது மிகவும் வலுவிழந்த நிலையில் இருப்பதால் அவர்கள் இனத்தவர்களை ஒன்று சேர்ப்பதற்காக இதுபோன்ற நாடகம் நடத்தப்படலாம் என்று சந்தேகத்தில் உள்ளனர்.

மேலும் இந்த சுமுகமாக முடிந்தால் பல நன்மைகள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னைத் தொடர்ந்து மத்திய அரசு மாவோ​யிஸ்ட்​கள் நச்சுக்கள் மார்ச் மாதத்திற்குள் ஒழிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News