பத்திரங்களை செலுத்துவதற்கு இந்தியா மாலத்தீவிற்கு அளித்துள்ள காலக்கெடு நீடிப்பு!!

By : G Pradeep
ஆரம்ப காலகட்டத்தில் மாலத்தீவு பல விதத்தில் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்தது. அச்சமயத்தில் மாலத்தீவிற்கு உதவி செய்வதற்காக இந்தியா முன் வந்தது. இந்தியாவிடம் மாலத்தீவு உதவி பெற்ற பிறகு முய்சுவின் கடுமையான நிலமை குறைய தொடங்கியது.
மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிக்கைப்படி சில குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் மாலத்தீவு அரசு விடுத்த வேண்டுகோளை அடிப்படையாகக் கொண்டு 50 மில்லியன் டாலர் மதிப்புடைய கருவுல பத்திரங்களை மீண்டும் செலுத்துவதற்கு ஓராண்டு காலம் மேலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டில் இதுபோன்று கருவுல பத்திரங்களை வாங்குவதன் மூலம் இந்தியா மாலத்தீவுக்கு வட்டி இல்லா நிதி உதவியை தொடர்ச்சியாக வழங்குகிறது.
இந்த சமயத்தில் மாலத்தீவு அரசு பத்திரங்களை திரும்பி செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட நாள் தற்பொழுது முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் தனித்துவமான ஏற்பாட்டின் அடிப்படையில் மாலத்தீவிற்கு அவசர நிதி உதவி பத்திரம் செலுத்துவதற்கு ஓராண்டு காலம் வரை நீடித்துள்ளதாக இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
