ககன்யான் திட்டம் குறித்து சூப்பர் அப்டேட் தெரிவித்த இஸ்ரோ தலைவர்!!

By : G Pradeep
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்காக ககன்யான் என்ற திட்டத்தில் தற்பொழுது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருவது தெரிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் தற்போது இந்த ககன்யான் திட்டத்தின் சோதனை பணிகள் 85% முடிந்துள்ளது இஸ்ரோ நிறுவனத்தின் தலைவரான வி.நாராயணன் சமீபத்தில் கோவை விமான நிலையத்திற்கு வந்தபோது கூறியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ககன்யான் திட்டம் தற்பொழுது வரை ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆளில்லாமல் வயோமித்ரா என்ற இயந்திர மனிதனை விண்கலத்திற்கு அனுப்பியதாக தெரிவித்தார். மேலும் ஆளில்லாமல் இரண்டு ராக்கெட்டுகளை அனுப்பப் போவதாகவும் அதன் பிறகு 2027 மார்ச்சில் மனிதர்களை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு பல சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தற்பொழுது வரை இந்த ககன்யான் திட்டத்தில் 85% வரை பணி நிறைவு பெற்றுள்ளது. ராக்கெட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தில் இஸ்ரோ மட்டுமல்லாமல் வானியல் மற்றும் கடல் படை உட்பட பல துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். விண்வெளி துறையிலும் தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு வந்துவிட்டது. இதைத்தொடர்ந்து சந்திராயன் 4 லும் ஏஐஐயை பயன்படுத்தி நிலாவின் மாதிரிகளை எடுத்துவர போவதாக தெரிவித்தார்.
