வசமாக சிக்கிய போலி மருத்துவர்கள்!! வேலூரில் நடந்த சம்பவம்!!

By : G Pradeep
வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி எஸ்பி மயில்வாகனன் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் இணைந்து வேலூரில் இருக்கும் போலி மருத்துவர்கள் கண்டறிவதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு நடத்தப்பட்ட திடீர் சோதனையில் வரிசையாக போலி மருத்துவர்கள் மாட்டியுள்ளனர்.
முதலில் குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் விவேகானந்தர் தெருவில் துர்கா ராம் என்பவரும், அவ்வை நகரைச் சேர்ந்த பெல்லியப்பா என்பவரும், பிச்சனூர் வாரியார் பகுதியைச் சேர்ந்த ஜோதி பிரியா, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ரேவதி என 4 போலி மருத்துவர்களை கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் என்ன படித்திருக்கிறார்கள் என்று பார்த்தால் 12 ஆம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதோடு நிறுத்தாமல் மேலும் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஒரு சில சந்தேகப்படக்கூடிய வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அதில் மத்தூர் கிராமத்தில் வீட்டிலேயே இருந்து ஆங்கில மருத்துவம் செய்து வந்த பாபுவை கண்டறிந்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விமலா, செல்வராஜ் என தொடர்ச்சியாக ஒரே நாளில் எட்டு போலி மருத்துவர்கள் ஒரே மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதைத்தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.
