ஆப்ரேஷன் சிந்தூரில் அழிக்கப்பட்ட முரிட்கே பகுதியில் மீண்டும் கட்டிடமா? பயங்கரவாத தளபதி அளித்த ஒப்புதல்!

By : G Pradeep
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காமில் ஏற்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய ராணுவம் கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் ஏற்படுத்தியது.
இந்த நடவடிக்கையை ஆபரேஷன் சிந்தூர் என்று அழைக்கப்பட்டது. அதில் பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் ஆஸாரி என்பவரின் குடும்பத்தில் இருந்து பத்து பேர் இறந்ததாக நான்கு மாதம் கழித்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பிலிருந்து கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஸார் என்பவரை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
இவர் இந்தியாவில் நிகழ்ந்த நாடாளுமன்றம் மற்றும் மும்பை ஆகியவற்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு பயங்கரவாத அமைப்பு ஆப்ரேஷன் செந்தூரால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டது.
இந்தியா நடத்திய தாக்குதலில் 9 பயங்கரவாத இடங்கள் அழிந்தது என்றும், முரிட்கே என்னும் லஸ்கரின் தலைமையிடமும் ஒன்று எனவும் அதை மீண்டும் கட்டிக் கொண்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் லஸ்கர் பயங்கரவாத தளபதி இந்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட முரிட்கேயில் மீண்டும் கட்டிடப் பணி நடந்து வருவதாகவும், இறைவனின் அருளால் முன்பை விட மிகப்பெரிய அளவில் கட்டப்படும் என்றும், பயங்கரவாதிகள் பல பேர் இந்த இடத்தில் பயிற்சி பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் அளிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை பயங்கரவாத குழு பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
