தூய்மை பணியாளர்கள் வழக்கில் ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு அரசு ஏன் பயப்படுகிறது? நீதிபதி கேள்வி!!

By : G Pradeep
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் தங்களுடைய ஆதரவை தெரிவித்த வழக்கறிஞர்கள் எந்தவித உத்தரவும் இல்லாமல் காவல்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வழக்கறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை ஒரு நபர் ஆணையம் விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியான பார்த்திபனை நியமித்தது.
இந்நிலையில் காவல்துறை சார்பில் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷா தலைமையிலான அமர்வு ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த உத்தரவை நிறுத்தி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி குறுக்கிட்டு இந்த விவகாரத்தில் இரு தரப்பினர்கள் இடையே விசாரணை நடத்தப்படும் வகையில் ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த விசாரணையே எண்ணி அரசு தரப்பு எதற்காக அச்சப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் காவல்துறை தரப்பில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டால் வேறு ஒரு நபரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆனால் நீதிபதி இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்து இந்த வழக்கை வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
