அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப் போகும் பியூஷ் கோயல்!!

By : G Pradeep
கடந்த 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் 131.84 பில்லியன் டாலராக இருந்தது. இதன் மூலம் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக இடம்பெற்றது. இந்த 131.84 பில்லியன் அமெரிக்க டாலரின் ஏற்றுமதிக்கு மட்டும் 86.5 பில்லியன் டாலர் என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய எதிர்ப்பை காட்டினார். இந்நிலையில் இந்தியாவிற்கு ஏற்கனவே இருந்த 25 சதவீத இறக்குமதி வரையானது மேலும் 25 சதவீதம் விதிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 50% வரியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தக பேச்சு பிப்ரவரி மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி வர்த்தகத் துறை சிறப்பு செயலாளரான ராஜேஸ் அகர்வால் தலைமையிலான குழு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்வதாக சமீபத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் விரைவில் பரஸ்பர பயனடையும் வகையில் வர்த்தக ஒப்பந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது குழுவுடன் இன்று அமெரிக்கா சென்று நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
