இந்தியாவுக்கு வாங்க...! சரியான நேரத்தில் அழைக்கும் ஸ்ரீதர்!!

By : G Pradeep
அமெரிக்காவில் விசா போன்றவற்றை அதிகரித்துள்ள நிலையில் சோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்காவை வாழும் இந்தியர்களுக்கு சில தகவல்களை கூறியுள்ளார்.
அதில் இரு நாடுகளுக்கு இடையில் பிரிவினை ஏற்படும் பொழுது எப்படி இந்தியாவிற்கு வர முடிந்தது என்பது குறித்து தன்னுடைய நண்பர்களிடம் பல கதைகளை கேட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் தங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் இந்திய தொழில் வல்லுநர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார். பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் நன்றாக வளர்ந்துள்ள சித்தி சமூகத்தினரை போல் நாமும் சொந்த நாட்டிலேயே நல்ல ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பும் தொழில் வல்லுநர்கள் இந்தியாவில் தங்களுடைய வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடைவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகலாம். இந்த ஐந்து ஆண்டுகள் உங்களை வலிமையாக்கும். பயத்தோடு வாழ்வதை விட துணிச்சலாக நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
