Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பதி உண்டியலில் கை வைத்து சிக்கியதா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்!!!

திருப்பதி உண்டியலில் கை வைத்து சிக்கியதா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்!!!
X

G PradeepBy : G Pradeep

  |  23 Sept 2025 12:04 PM IST

கடந்த 2023 ஆம் ஆண்டில் நடந்த ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் திருட்டுப் போனதாக எழுந்த விவகாரத்தில் சி பி சி ஐ டி விசாரணைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் வழக்கை விசாரிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் சி வி ரவிக்குமார் என்பவர் ஈடுபட்டு வந்தார். 2023 ஆம் ஆண்டு பரகாமணி இடத்திலிருந்து 112 மறைத்து வெளியே கொண்டு வந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகளால் ரவிக்குமார் பிடிபட்டார்.

இந்நிலையில் ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி அவர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்து மதிப்புகள் திருமலை தேவஸ்தானம் எழுதி வாங்கியது. இந்த விவகாரத்தில் 100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் வெளிநாட்டு டாலர்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பிரச்சனை லோக் அதாலத் மூலம் தீர்த்து வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது பாஜகவின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அறக்காவலராக பாஜகவை சேர்ந்த பானு பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி உண்டியல் காணிக்கை திருட்டு குறித்து மறுவிசாரணை நடத்த கோரிக்கை முன் வைத்ததை தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி விசாரிப்பதற்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு அடுத்த கட்டத்திற்கு எப்படி போகும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News