ஜிஎஸ்டி மறு சீரமைப்பு!! எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறைந்திருக்கிறது என்று தெரியுமா??

By : G Pradeep
ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் ஜி எஸ் டி வரியானது 5%, 18% மற்றும் 40% என பிரிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு 5% முதல் 18% வரை கொண்டுவரப்பட்டுள்ளஅவற்றில் பால், பன்னீர், சப்பாத்தி மற்றும் புரோட்டா போன்ற உணவுப் பொருட்களுக்கும், பயிற்சி புத்தகங்கள், வரைபடங்கள் மற்றும் விளக்கப் படங்கள், லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரி எதுவும் கிடையாது.
வெண்ணெய், நெய், இறைச்சி, ஜாம், பழச்சாறு, சீஸ் போன்ற உணவுப் பொருள்களுக்கு 5% வரி. அழகு மற்றும் உடற்பயிற்சி சேவைகளுக்கு கீழ் வரும் சலூன், ஸ்பாக்கள் மற்றும் ஜிம் யோகா போன்றவைகளுக்கு 5%. வீடுகளில் பயன்படுத்தப்படும் அன்றாட பொருள்களான ஷாம்பு, பல்பொடி, டூத் பிரஸ், சமையலறை பொருட்கள், சைக்கிள் பர்னிச்சர், காலனி மற்றும் ஜவுளி போன்ற பொருள்களுக்கு 5%.
உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற மருத்துவத்திற்கு பயன்படும் சில பொருட்களுக்கு 5% எனவும், தையல் இயந்திரம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்றவற்றிற்கும் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட் போன்றவற்றிற்கு 18%, மோட்டார் சைக்கிள், உதிரி பாகங்கள், சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் டீசல் வாகனம் போன்றவற்றிற்கும் 18% ஜிஎஸ்டி வரி தற்பொழுது விதிக்கப்பட்டுள்ளது.
