Kathir News
Begin typing your search above and press return to search.

முதலிடத்தில் உத்தர பிரதேசம்!! வேற லெவலில் தட்டி தூக்கும் யோகி ஆதித்யநாத்!!

முதலிடத்தில் உத்தர பிரதேசம்!! வேற லெவலில் தட்டி தூக்கும் யோகி ஆதித்யநாத்!!
X

G PradeepBy : G Pradeep

  |  23 Sept 2025 6:39 PM IST

மத்​திய கணக்கு தணிக்​கை​யாளர் (சிஏஜி) அலு​வல​க அறிக்கையில் ஒவ்வொரு மாநிலத்தின் அரசுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் உள்ள 16 மாநிலங்களின் வருவாயும் உபரியாக இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் உபரி வருவாயானது ரூ. 37 ஆயிரம் கோடியாக இருந்து வந்த நிலையில் வருவாய் பற்றாக்குறையாக இருந்த மாநிலங்களின் வரிசையில் இருந்த உத்தர பிரதேசம் தற்பொழுது உபரி வருவாயில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த பட்டியலில் குஜராத் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் ரூ. 19000 கோடிக்கு மேலும், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் ரூ. 13400 கோடிக்கு மேலும் அதைத்தொடர்ந்து சத்தீஸ்கர் தெலுங்கானா, உத்தரகாண்ட் மற்றும் கோவா என அடுத்தடுத்த இடங்களில் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பற்றாக்குறை மாநிலங்களின் வரிசையில் உபரி வருவாய் பட்டியலில் மத்திய பிரதேசம் ரூ.4,091 கோடி என உள்ளதால் இவ்வரிசையில் இடம்பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த வரிசையில் அருணாச்​சல், மணிப்​பூர், மிசோரம், நாகாலாந்​து, திரிபுரா மற்​றும் சிக்​கிம் போன்ற மாநிலங்களும் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்களின் வரிசையில் ஆந்திர பிரதேசம் ரூ.43,488, தமிழ்நாடு ரூ.36,215 கோடி எனத் தொடங்கி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா, அசாம், பீகார், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மேகாலயா போன்ற 12 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News