இந்தியா உக்ரைன் பக்கம் தான்!! ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிபர் ஸெலென்ஸ்கி!!

By : G Pradeep
ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியாக போர் தொடுப்பதற்கு இந்தியாவும் ஒரு முக்கிய காரணம் என்று ஏற்கனவே ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசும் பொழுது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு முன் வைத்திருந்தார்.இந்நிலையில் ஐ.நா. சபையின் 80வது அமர்வு கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட டொனல்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் வாங்கி வருவதன் மூலம் ரஷ்யாவுக்கு நிதி உதவி அளித்து உக்ரைன் மீது தொடர்ச்சியாக போர் தொடுப்பதற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் உதவியாக இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி பேட்டி ஒன்றில், பெரும்பாலும் இந்தியா உக்ரைன் பக்கமே செயல்படுவதாக தனக்கு தோன்றுகிறது என்றும், எரிசக்தி வணிகத்தால் ஒரு சில சவால்கள் இருந்தாலும் கூட அவற்றிற்கும் விரைவில் தீர்வு எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்பினால் இதுபோன்ற பிரச்சனைகளை சமாளித்து விட முடியும் என்று கூறிய உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி நம்மால் முடிந்த அனைத்தையுமே முயற்சி செய்ய வேண்டுமே தவிர இந்தியாவை கைவிடக்கூடாது என்று கூறியிருந்தார்.
விரைவில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் எரிசக்தி போக்கை மாற்றிக் கொள்ளும் என்றும், ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதால் இது போன்ற நிலைப்பாடு விரைவில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.
