காலம் காலமாக கட்சியில் இருப்பவர்களுக்கு இதுதான் நிலைமை!! ஆதங்கத்தை கொட்டி தீர்த்த திமுக செயலாளர்!!

By : G Pradeep
வேறு கட்சிகளில் இருந்து வருபவர்கள் அவர்களைத் தான் வளப்படுத்திக் கொள்கிறார்கள். கட்சி நிகழ்ச்சிகளில் எங்களைத்தான் புரிந்து எடுக்கிறார்கள் இன்று திமுக செயலாளர் ஒருவர் புலம்பியது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே செந்தில்பாலாஜி கோடு போடச் சொன்னால் ரோடே போடுவார் கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏவாக இருந்த பி.வி.பி.முத்து கடந்த 2017 ஆம் ஆண்டு திமுகவிற்கு மாறிய நிலையில் அவருக்கு திமுக கட்சியில் கடலூர் மாவட்டத்தின் மேற்கு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
மேலும் அன்பில் மகேஷுக்கு நண்பர் என்ற விதத்தில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் அதன் பிறகு கிடைத்தது. அதேபோல அதிமுகவிலிருந்த வி.டி.கலைச்செல்வன் கடந்த 2023 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்து இலக்கிய அணி துணைச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி காலங்காலமாக நாங்கள் கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்கள் கட்சிப் பணியை எதுவுமே செய்யாமல் நிகழ்ச்சிகளுக்கு வந்து தலையை காட்டி விட்டு சென்று விடுகின்றனர்.
எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யும் எங்களை விட அவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து நல்ல வருமானம் ஈட்டும் முக்கியமான பதவிகளை அளித்து மேடையில் அமர வைக்கின்றனர் என்று பாவாடை கோவிந்தசாமி தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
