சிறுநீரக திருட்டு வழக்கு சிறப்பு விசாரணை குழு அமைத்தும் இந்த நிலைமையா?? சிபிஐக்கு மாற்றப்படுமா??

By : G Pradeep
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திரட்டு தொடர்பான வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்ட சிறுநீரக மற்றும் உடல் உறுப்புகள் திருட்டு தொடர்பான விசாரணை நடத்துவதற்காக தென் மண்டலத்தின் ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையிலான மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நிஷா, சிலம்பரசன், அரவிந்த் மற்றும் கார்த்திகேயன் உட்பட சிறப்பு படை அமைத்து தீவிர விசாரணை நடத்துவதற்காக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் தலைமையில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு சிறுநீரக திருட்டு குறித்த விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே சிறுநீரக திருட்டு விசாரணையை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் அளிக்கப்பட்ட மனு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த விசாரணையை தற்பொழுது நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
