ஜம்மு காஷ்மீர் பகுதியில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறக்கப் போகிறார்களா?

By : G Pradeep
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரின் பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கில் நடத்திய தாக்குதலால் 26 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தற்பொழுது காஷ்மீரில் இருக்கும் 50 சுற்றுலா தளங்களை ஜம்மு காஷ்மீர் நிர்வாக மூடி இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் பாதுகாப்பு மறு ஆய்வு செய்து கிட்டத்தட்ட 12 சுற்றுலா தலங்களை ஜம்மு காஷ்மீரில் தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா தலைமையில் கடந்த வாரம் ஸ்ரீநகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மனோஜ் சின்ஹா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் முழுமையான பாதுகாப்பு மறு ஆய்வு செய்து உறுதி செய்ததற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருக்கும் சுற்றுலாத்தலங்களை மீண்டும் திறப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதில் அருபள்ளத்தாக்கு, ராஃப்டிங் முனையன்னர் என ஏழு சுற்றுலா இடங்களும், ஜம்மு பிராந்தியத்தில் ராம்பனில் உள்ள ஐந்து சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். காஷ்மீர் பகுதியில் இருக்கும் எட்டு சுற்றுலா தலங்களை கடந்த ஜூன் மாதம் பிறப்பதற்கு மனோஜ் சின்ஹா உத்தரவு பிறப்பித்தார்.
