தாவெக பிரச்சாரத்தில் நடந்த கொடூர செயலை விசாரிப்பதற்கு தரை இறங்கிய பாஜக எம்.பி குழு!!

By : G Pradeep
கரூரில் நடந்த தாவெக பிரச்சாரத்தின் கூட்டத்தில் மாட்டி 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு ஒன்று அமைத்து கரூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எட்டு எம்பிகள் கொண்ட குழு ஒன்றை ஜே.பி நட்டா அமைத்துள்ளார். இதனுடைய தலைவராக ஹேமமாலினி பொறுப்பேற்றுள்ளார். இதில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, தெலுங்கு தேசக் கட்சியில் புட்டா மகேஷ் போன்றோர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர். இந்நிலையில் ஹேமமாலினி கரூரில் நடந்தது என்ன? அந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு நாங்கள் வந்துள்ளோம் என்று கூறினார்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தங்களுடைய ஆறுதலையும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் எந்த ஒரு அவசரமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் பொறுமையாக பார்த்து ஆய்வு செய்யும் வரை இங்குதான் இருப்போம் என்றும், ஆய்வு செய்த தகவலை அறிக்கையாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.
