Kathir News
Begin typing your search above and press return to search.

ம.பியில் அனுமதி பெறாத மதரஸாக்கள்! இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிப்பு! மதமாற்றுவதற்கான முயற்சியா?

ம.பியில் அனுமதி பெறாத மதரஸாக்கள்! இந்து குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிப்பு! மதமாற்றுவதற்கான முயற்சியா?
X

G PradeepBy : G Pradeep

  |  2 Oct 2025 12:24 PM IST

மத்திய பிரதேசத்தில் இருக்கும் 27 மதராஸாக்களில் 556 ஹிந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தரப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் படி தேசிய மனித உரிமை ஆணையம் இந்த செயல் மதமாற்றம் செய்வதற்கான முயற்சியால் என்று ம.பி. அரசுக்கு கேள்வி எழுப்பும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருக்கும் போபால், ஹோஷங்காபாத், ஜபல்பூர், ஜபுவா, தார், பர்வானி, காண்ட்வா உட்பட பல பகுதிகளில் அரசிடம் அனுமதி பெறாமல் பல மதரஸாக்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் இந்து குழந்தைகளும் கல்வி பயின்று வருவதாகவும், அதில் 556 இந்து குழந்தைகளுக்கு புனிதக் குர்ஆன் கற்றுத் தருவதாக தகவல் தெரிய வந்தது.

இதன் மூலம் இந்து குழந்தைகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதற்காக இதுபோன்று செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம் சரியான விளக்கம் கேட்டு ம.பியின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் இது குறித்து விசாரணை நடத்தி ஆணையருக்கு அறிக்கை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பிரியங்க் கனூங்கோ ம.பியில் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சட்டவிரோதமாக மதமாற்றும் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் படி மதரஸாக்களில் முஸ்லிம் அல்லாத குழந்தைகளை எப்படி சேர்க்க முடியும் என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி அரசாங்கம் அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாக புகார் வந்தது.

சிறார் நீதிச் சட்டம் 2015 மற்றும் அரசியலமைப்பின் பிரிவு 28(3) படி அனுமதி இன்றி மதக் கல்வியை தடை செய்தும், மதரஸாக்களில் இந்து குழந்தைகளை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அரசிடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் மதரஸாக்கள் மீது எஃப்ஐஆர் செய்ய ஆணையம் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இதற்கான பதிலை ஆணையத்திற்கு அனுப்பும்படி கூறி இருப்பதாக தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News