கரூர் சம்பவத்தை தொடர்ந்து பாஜக எம்.பி.க்கள் குழு முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்!!

By : G Pradeep
கரூரில் தாவெக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து விரிவான அறிக்கை கோரி பாஜக எம்.பி அனுராக் தாக்குர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் நெரிசலை சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக 8 பேர் கொண்ட குழு சம்பவம் நடத்த இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பியதோடு மட்டுமல்லாமல் முழு பொறுப்பையும் நீங்கள் தான் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முதன்மை காரணம் என்ன? நிகழ்வு நடப்பதற்கு முன்பாகவும், அதன் பின்பும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவதற்கு நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் இவ்வாறான ஏற்பாடுகள் செய்தன? என்ன முன்னெச்சரிக்கை எடுத்தன? தடுப்பு நடவடிக்கை இருந்த போதிலும் எவ்வாறு இது போன்ற செயல் நடந்தது? அதிலிருந்த குறைபாடுகள் மற்றும் எதிர்பாராத சம்பவம் என்ன? தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டது.
எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு மாநில அரசு என்ன திட்டம் வைத்துள்ளது போன்றவற்றை விரைவில் பகிர வேண்டும். இந்த கடிதமானது தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கரூர் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசின் செயலாளருக்கும் பகிரப்பட்டது. மேலும் இக்கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய தீர்வை கண்டறிய வேண்டும் என்று அனுராக் தாக்குர் எம்.பி கூறியுள்ளார்.
