இந்தியாவின் இழப்பை ரஷ்யா ஈடு செய்யும்! அமெரிக்காவிற்கு இந்தியா அடிபணியாது! புதன் பேச்சு!!

By : G Pradeep
ரஷ்யாவில் உள்ள சோச்சி என்னும் பகுதியில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பாக நடந்த நிகழ்வில் இந்தியா உட்பட 140 நாடுகள் பங்கேற்றன. அதில் ரஷ்யாவின் அதிபர் புதின் ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது அதிக அளவில் வரி விதித்தால் உலக அளவில் எரிசக்தி பொருள்களின் விலை உயரும் என்று கூறினார்.
அமெரிக்க ஃபெடரல் மத்திய ரிசர்வ் வங்கி உங்களுடைய வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு நிகழ்ந்தால் அமெரிக்கா நிதிநிலை குறைய தொடங்கும் எனக் கூறினார். மேலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவிற்கும் எப்போதும் சிக்கல் இருந்ததில்லை என்றும், அயல்நாடுகள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு இந்திய அடிபணியாது அதற்கு பிரதமர் மோடியும் அனுமதிக்க மாட்டார்.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யை நிறுத்தினால் ரஷ்யாவிற்கு 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் என்றும், அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள அதிகப்படியான வரி விதிப்பால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ரஷ்யா சரி செய்யும் என்று கூறினார்.
மேலும் இந்தியாவில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை ரஷ்யா வாங்கும். அதனால் இரு நாடுகளுக்கு இடையில் நட்பு நாடு என்ற நிலையும் ஏற்படும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதற்கும் அமெரிக்கா தங்களுடைய நாட்டிற்கு தேவைப்படும் சில பொருட்களை ரஷ்யாவிடம் வாங்குவதை வலக்கத்தில் வைத்துள்ளது.
அமெரிக்க சந்தைக்கு தேவைப்படும் யுரேனியத்தை விற்பனை செய்யும் நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
