சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களுக்கு இனி ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை!

By : G Pradeep
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு சுங்கச்சாவடிகளில் பணம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்க ஃபாஸ்ட் டேக் என்னும் முறை கொண்டுவரப்பட்டது.
இதன்படி வாகனங்கள் ஃபாஸ்ட் டேக் இல்லாமலோ அல்லது கால அவகாசம் முடிந்தோ தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொழுது பொதுவாக சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதாவது சுங்கச்சாவடியில் ஒரு வாகனத்திற்கு 100 ரூபாய் வசூலிக்கப்படும் இடத்தில் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்பொழுது இந்த முறையை மாற்றி தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் ஃபாஸ்ட் டேக் இல்லாத வாகனங்களோ அல்லது இல்லாத ஃபாஸ்ட் டேக் கொண்டிருக்கும் வாகனங்களோ செல்லும்பொழுது சுங்கச்சாவடியில் யு.பி.ஐ மூலம் கட்டணம் செலுத்தினால் 1.25 மடங்கு தொகை வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 100 ரூபாய் கொடுக்கும் இடத்தில் 125 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த புதிய நடைமுறையை இந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
