ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வரின் பெயர் ரகசியமாக சூட்டப்பட்டதா??

By : G Pradeep
ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த அண்ணா பேருந்து நிலையம் அமைந்திருந்த இடம் நகராட்சிக்கு சொந்தமாக இருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில் வாராந்திர சந்தை பகுதியில் பல வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
அப்பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காரணமாக 20 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையங்களை பொதுமக்கள் பழைய பேருந்து நிலையம் மற்றும் புது பேருந்து நிலையம் என்று அழைத்து வந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பேருந்து நிலைய கட்டிட வேலைகள் நடந்து வந்த நிலையில் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து இந்தப் பேருந்து நிலையத்திற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இமானுவேல் சேகரன் போன்ற தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
ஆனால் இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி என்ற பெயரை வைப்பதற்கு ராமநாதபுரம் நகர் மன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என பெயர் சூட்டினார்.
முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டால் இது தொடர்பாக எதிர்ப்புகள் எழும் என்றும், அதனால் இரவோடு இரவாக பேருந்தின் வடக்கு நுழைவாயிலில் பெயரை எழுதி உள்ளதாக தெரியவந்தது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு முன்னால் முதல்வரின் பெயரை வைத்ததற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
மேலும் இந்த பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தை சேதுபதி மன்னர்கள் வழங்கியதாகவும், பேருந்து நிலையத்திற்கு அவரின் பெயரை வைக்காமல் கருணாநிதியின் பெயரை சூட்டி இருப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார். மேலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொழுது பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
