பிடிபட்ட காங்கிரஸ் தலைவர்!! சட்ட விரோதமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கியதால் எழுந்த புகார்!!

By : G Pradeep
நவம்பர் பதினோராம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹைதராபாத்தில் சட்ட விரோதமாக ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டைகளை வினியோகம் செய்ததாக காங்கிரஸ் தலைவர் மீது பாஜகவை சேர்ந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நவீன் யாதவ் மீது மதுரா நகர காவல் நிலையத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆனதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிலையில் பாஜக மக்களவை உறுப்பினர் எம். ரகுநந்தன் ராவ் தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ஜூபிலி ஹில்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்து நவீன் யாதவ் வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகம் செய்ததாக கூறினார்.
சட்டப்படி வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மட்டுமே வாக்காளர் அட்டைகளை வழங்கும் அதிகாரம் உடையவர்கள் என்றும், தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் பார்வையில் தான் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஆனால் இதுபோன்று சட்டவிரோதமாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த நிகழ்வின்போது அங்கிருந்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
