Kathir News
Begin typing your search above and press return to search.

அதிகரித்து வரும் துப்புரவு பணியாளர்களின் இறப்புக்கள்!! காற்றில் பறந்த திமுக வாக்குறுதி!!

அதிகரித்து வரும் துப்புரவு பணியாளர்களின் இறப்புக்கள்!! காற்றில் பறந்த திமுக வாக்குறுதி!!
X

G PradeepBy : G Pradeep

  |  7 Oct 2025 11:06 PM IST

தமிழகத்தில் திமுக அரசு கையால் மலம் அள்ளும் முறையை முற்றிலும் ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை காப்பாற்ற தவறியதாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி கழிவு நீர் குழிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர்கள் கையால் மலம் அள்ளும் முறையை முற்றிலுமாக ஒழிப்பதாக கூறி தேர்தல் அறிக்கையில் நவீனமயமாக்கல் மற்றும் இயந்திரமயமாக்கல் போன்றவற்றால் துப்புரவு பணிகளில் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதாக பேசப்பட்டது.

திமுகவின் வாக்குறுதியாக இது பார்க்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர்கள் மிகவும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் வாக்குறுதி அளித்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தொடர்ச்சியாக மனிதர்களே இது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். இதனால் தொடர்ச்சியாக பல இறப்புகளும் ஏற்பட்டு வருகிறது. சரியான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மேற்பார்வை இல்லாததால் இது போன்ற இறப்புகள் ஏற்படுகிறது.

என்னதான் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கினாலும் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்காதா என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் 16 ஆக இருந்த இறப்பு சதவீதம், 2023 ஆம் ஆண்டில் 18 சதவீதமாக உயர்ந்தது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு சதவீதம் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் எட்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை திருப்பதி நகரில் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பொழுது நச்சு வாயை தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மேலும் ஒரு துப்புரவு பணியாளர் இறந்த சோகம் நேர்ந்துள்ளது. விரைவில் இதற்கான தீர்வை திமுக அரசு நிறைவேற்றுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News