ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் அடுத்த படத்தில் இவங்கள?
ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் அடுத்த படத்தில் இவங்கள?
By : Kathir Webdesk
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் ’எல்.கே.ஜி’. இந்த நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வசூலும் விமர்சனங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்த படத்தில் நடிக்க ஆர் ஜே பாலாஜி ரெடியாகியுள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘மூக்குத்தி அம்மன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என தகவல். மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவருகிறது.
மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க விருக்கிறார் எனவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்பாகவே நயன்தாரா மற்றும் ஆர்.ஜே பாலாஜி ’வேலைக்காரன்’ மற்றும் ’நானும் ரவுடிதான்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர் என அனைவருக்கும் தெரியும்.
தற்போது நயன்தாரா ரஜினிவுடன் 'தர்பார்’ மற்றும் மற்றும் மிலிந்த் ராவ் இயக்கும் 'நெற்றிக்கண்'ஆகிய படங்களில் நடிக்கிறார்.