NGOக்களின் ஒரே குறிக்கோள் இந்தியாவைக் கூறு போட்டு நமது கலாச்சாரத்தை அழிப்பது - உண்மையைப் போட்டு உடைக்கும் கேரள அமைச்சர்.!
NGOக்களின் ஒரே குறிக்கோள் இந்தியாவைக் கூறு போட்டு நமது கலாச்சாரத்தை அழிப்பது - உண்மையைப் போட்டு உடைக்கும் கேரள அமைச்சர்.!

கோவில் யானைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி அவற்றை பாகன்களின் அன்பான ஆதரவான கவனிப்பிலிருந்து பிரித்து, சுதந்திரமாக விடுகிறேன் பேர்வழி என்று பழக்கப்படுத்தப்பட்ட யானைகளை கொடுமைப்படுத்தும் தொண்டு நிறுவனங்கள் மீண்டும் வேலையை ஆரம்பித்து விட்டன.
கேரளாவில் கர்ப்பிணி யானை இறந்த சம்பவத்தைக் காரணம் காட்டி மனிதர்கள் இப்படித்தான் விலங்குகளைக் கொடுமைப் படுத்துவார்கள், எனவே கோவில் யானைகளை மீட்க வேண்டும் என்று கிளம்பி இருக்கிறார்கள். அண்மையில் புகழ்பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லக்ஷ்மியையும் சரியான கவனிப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தென்னிந்தியாவில் யானைகள் அதிகம் வளர்க்கப்படும் கேரளாவில் இத்தகைய தொண்டு நிறுவனங்களின் தொல்லை அதிகம். இந்த மாதிரி அமைப்புகளைப் பற்றி கேரளாவின் முன்னாள் வனத்துறை அமைச்சர் திரு.கணேஷ் குமார் பேட்டியளிக்கையில், "தற்போது நிறையப் பேர் விலங்குகள் நல ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு கிளம்பி இருக்கிறார்கள். தங்களது வாழ்வில் ஒருமுறை கூட பாசமாக ஒரு பழத்தைக் கூட யானைகளுக்கு கொடுத்திராத இவர்கள் அற்பமான காரணங்களைக் கூறி பொது நல வழக்குகளைத் தொடுக்கிறார்கள். நான் வனத்துறை அமைச்சராக இருந்த போது ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் என்னைச் சந்தித்து வட கேரளாவில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்து 10-15 கோடி நிதியும் தந்து, மேலும் கேரளாவில் உள்ள பழக்கப்படுத்தப்பட்ட கோவில் யானைகளை கோவில்களிலிருந்து நீக்கி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அதைக் கொண்டு அவர்கள் ஒரு சரணாலயம் அமைக்கப் போவதாகவும் கூறினர்.
அவர்களது நோக்கமே விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதாக ஏதாவது சொல்லி பணம் பறிப்பது தான். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருவருமே பல தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நமது தேசத்தைப் கூறு போடும், நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை சிதைக்கும் ஒரே குறிக்கோளுடன் பெருமளவில் நிதி பெறுவதாகக் கூறி இருக்கின்றனர்." என்று தொண்டு நிறுவனங்களின் உண்மை முகத்தைத் கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார். பொது வெளியில் கிடைக்கும் தரவுகளின் மூலம் இது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும் ஒரு அமைச்சரே இவ்வாறு கூறுவது தொண்டு நிறுவனங்களின் நோக்கத்தை சந்தேகத்திற்குரியதாக்குகிறது.