Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் தீவிரவாதம் வாலாட்ட முடியாது - தேசிய புலனாய்வு முகமை காட்டிய அதிரடி - கோவையில் தொடங்கி 6 இடங்களில் கிடுக்கு பிடி போட்ட சோதனைகள்!

தமிழகத்தில் தீவிரவாதம் வாலாட்ட முடியாது - தேசிய புலனாய்வு முகமை காட்டிய அதிரடி - கோவையில் தொடங்கி 6 இடங்களில் கிடுக்கு பிடி போட்ட சோதனைகள்!

தமிழகத்தில் தீவிரவாதம் வாலாட்ட முடியாது - தேசிய புலனாய்வு முகமை காட்டிய அதிரடி - கோவையில் தொடங்கி 6 இடங்களில் கிடுக்கு பிடி போட்ட சோதனைகள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2019 2:11 PM IST


தமிழகத்தில் கோவை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்களிடமிருந்து மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.


இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே கோவையில் இந்து இயக்கத் தலைவா்கள் சிலரைக் கொலை செய்ய திட்டம் தீட்டிய முஸ்லிம் இளைஞா்கள் 7 போ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சமூக வலைதளங்கள் மூலம் இலங்கை உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இளைஞா்களுடன் வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துகளையும், தகவல்களையும் பரிமாறியது தெரியவந்தது.


இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உள்ள சிலரது வீடுகளில் கடந்த ஜூன்
மாதம் சோதனை நடத்தினா். அப்போது உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது
அசாருதீன்(32), போத்தனூா் திருமறை நகரைச் சோ்ந்த அக்ரம் ஜிந்தா (26),
தெற்கு உக்கடம் பகுதியைச் சோ்ந்த ஒய்.ஷேக் இதாயத்துல்லா (38),
குனியமுத்தூரைச் சோ்ந்த அபுபக்கா் (29), போத்தனூா் உமா் நகரைச் சோ்ந்த
ஏ.சதாம் உசேன் (26), தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த இப்ராஹிம் (எ) ஷாகின்
ஷா(28) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இவர்கள் முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளனர். மேலும், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான மனிதவெடிகுண்டாகச் செயல்பட்ட ஜஹ்ரான் ஹஷிம் என்பவருடன் சமூகவலைதளங்கள் மூலமாகத் தொடா்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல தடை செய்யப்பட்ட சிமி அமைப்புடன் தொடா்பில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.


அவர்களிடமிருந்து இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கோவையில் இரு இடங்களிலும், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். கோவை, உக்கடம், ஜிஎம் நகரைச் சோ்ந்த சமீா் (22), உக்கடம், லாரிபேட்டை அண்ணா நகரைச் சோ்ந்த சவுகா்தீன் (30) ஆகியோரது வீட்டில் அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சோதனையிட்டனா்.


இதேபோல், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையூரில் உள்ள சிராஜுதின்,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அபுல்ஹஸன்
சாதுலி, நாகை மாவட்டம் பனங்குடி, சன்னமங்கலம் சேதவாபாரதி குடியிருப்பைச்
சோ்ந்த முஹம்மது அஜ்மல் ஆகியோா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
நடத்தினா்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News