Kathir News
Begin typing your search above and press return to search.

தொடரும் என்.ஐ.ஏ வேட்டை - தென்னிந்தியாவில் அதிகம் சிக்கும் தீவிரவாதிகள்

கர்நாடகத்தில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது.

தொடரும் என்.ஐ.ஏ வேட்டை - தென்னிந்தியாவில் அதிகம் சிக்கும் தீவிரவாதிகள்

KarthigaBy : Karthiga

  |  1 Aug 2022 11:30 AM GMT

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கர்நாடகத்தில் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க தேசிய புலனாய்வு முகமை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி அந்த அமைப்பினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பயங்கரவாத அமைப்புகளையும் ஆள் சேர்ப்பவர்களையும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களையும் கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகிறார்கள்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் மக்களாக இருக்கும் பயங்கரவாத 'ஸ்லீப்பர் செல்கள்'பற்றி உளவுத்துறை மூலம் தகவல்களை பெற்று அவர்களின் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அமைப்பினர் ரகசியமாக கண்காணித்து தக்க சமயத்தில் கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் பெங்களூரில் ஸ்ரீ ராமபுரத்தில் உள்ள மசூதியில் பதுங்கி வசித்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி தாலிப் உசேன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கூட பெங்களூரு நகரில் வசித்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார் .இவர் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் தங்கியிருந்த இன்னொரு பயங்கரவாதியும் கைது செய்யப்பட்டார். அவர்கள் 2 பேரையும் என்.ஐ .ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் மத்திய பிரதேசம் , குஜராத் கர்நாடகம், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

கர்நாடகத்தில் இரண்டு மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடலோரப் பகுதியில் உள்ள உத்தர கன்னடா , பெங்களூரு அருகே துமகூரு மாவட்டத்தில் இந்த சோதனை நடந்து இருந்தது .இந்த சோதனையின்போது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் பகுதியில் வசிப்பவர் அப்துல் முஸ்தகீர். இதுபோல துமகூருவுடன் ஜெயநகர் பகுதியில் வசிப்பவர் ரபீக் அகமது.இவர்கள் இரண்டு பேருக்கும் சிரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நேற்று இரண்டு பேரின் வீடுகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது இரண்டு பேரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள்,மடிக்கணினிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரையும் பெங்களூருவுக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News