Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்கள்- மோடி தலைமையில் தொடக்கம்

தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்கள்- மோடி தலைமையில் தொடக்கம்

KarthigaBy : Karthiga

  |  24 Sep 2023 7:00 AM GMT

அதிவேகத்தில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசுப் பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழிதடங்களில் 50 ரயில்கள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் மேலும் 9 புதிய ரயில்கள் இயங்க உள்ளன. தமிழ்நாட்டில் நெல்லை - சென்னை வழித்தடம் உட்பட மொத்த 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும். இந்த ஒன்பது ரயில்களிசேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மதியம் 12:30 மணிக்கு தொடையை செய்து தொடங்கி வைக்கிறார்.


நெல்லை சென்னை வழித்தடம் தவிர உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் , ஹைதராபாத்- பெங்களூரு, விஜயவாடா - சென்னை பாட்னா - ஹவுரா , காசர்கோடு- திருவனந்தபுரம் ரூர்கேலா - புவனேஸ்வர் பூரி - ராஞ்சி, ஜாம்நகர்- ஆமதாபாத் ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயங்குகின்றன. இதன் மூலம் தமிழ்நாடு இராஜஸ்தான், தெலுங்கானா , ஆந்திரா, கர்நாடகா பீகார் , மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் பயன்படுத்துகிறது.


மேற்கண்ட வழிதடங்களில் தற்போதுள்ள அதிவேகரயில்களுடன் ஒப்பிடும்போது புவனேஸ்வர் பூரி ரயில் மற்றும் காசர்கோடு திருவனந்தபுரம் ரயில் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும். ஹைதராபாத் பெங்களூர் ரயில் இரண்டரை மணி நேரமும் நெல்லை - மதுரை - சென்னை ராஞ்சி- ஹவுரா ரயில்சுமார் 2 மணி பாட்னா ஹவுரா ரயில் மற்றும் ஜாம்நகர் ஆமதாபாத் ரயில் ஆகியவை சுமார் ஒரு மணி நேரமும் உதைப்போர் ஜெய்ப்பூர் ரயில் சுமார் அரை மணி நேரமும் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வேகம் கொண்டதாக இருக்கும். இந்த ரயில்கள் பூரி ஜெகநாதர் திருப்பதி ஏழுமலையான் மதுரை மீனாட்சி கோவில் போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News