Kathir News
Begin typing your search above and press return to search.

பிறந்தநாள் வழிபாட்டுக்குரிய ஒன்பத்து வேலி வன்மீகநாதர் கோவில்

தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஆட்சி செய்த போது பல பகுதிகளில் சிவாலயங்கள் பலவற்றை கட்டி அதற்கு வழிபடும் முறைகளையும் வகுத்தனர். அதில் ஒன்றுதான் ஒன்பத்துவேலி வன்மீக நாதர் கோவில்.

பிறந்தநாள் வழிபாட்டுக்குரிய ஒன்பத்து வேலி வன்மீகநாதர் கோவில்
X

KarthigaBy : Karthiga

  |  2 March 2023 7:30 AM GMT

சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சைக்கு அருகிலே பல்வேறு சிவன் கோவில்களை எழுப்பி உள்ளதை நம்மால் அறிய முடிகிறது. அந்த வகையில் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்து வேலி கிராமத்தில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது வன்மீகநாதர் கோவில். கிராமத்தின் வடகிழக்கில் சோமகலா அம்பாளுடன் வன்மீகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஒன்பத்து வேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுநர்களும் கணிதமேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்து வேலியாகும்.


தற்போதும் நவாம்சம் ,நவநீதிகள், நவபாஷாணம் ,நவ மூலிகைகள், நவசாரம் , நவகற்கள், நவஜோதிகள், நவசக்திகள் என்பதாக ஒன்பது வகையான நவ சாதனங்கள் ஆன்மீக ரீதியாக பொங்கி பொழியும் தலம் என்பதால் ஜோதிடர்களும் குறிப்பாக எண்கணித ஜோதிடர்களும் நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம் வன்மீக நாதர் சுவாமி கோவில் ஆகும். ஒன்பத்து வேலி வன்மீகநாத சுவாமி கோவிலில் இருந்து வானில் விசேஷமான முறையில் நட்சத்திர தரிசனங்களை அந்த காலத்தில் பக்தர்கள் பெற்றார்கள் என்பது செவிவழி வந்த செய்தியாக அறியப்படுகிறது.


ஒன்பத்து வேலியில் அருள்பாலிக்கும் வன்மீக நாதர் வான்மேகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார் . பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில் ஒன்பத்து வேலி வன்மீக நாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்து வேலி வன்மீக நாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீக நாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் .ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும் .9 என்பது செவ்வாய்க்குரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை , செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீக நாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News