Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை விட கொடுமையானது 'நிபா' வைரஸ் - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

கொரோனா வைரஸ் தொடர்ந்து அடுத்த நிபா வைரஸ்-ன் தாக்கம் ஆங்காங்கே பரவலாக காணப்படுவதால் அனைத்து மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

கொரோனாவை விட கொடுமையானது நிபா வைரஸ் - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

KarthigaBy : Karthiga

  |  16 Sep 2023 6:30 AM GMT

கேரளாவில் 'நிபா' வைரஸ் என்ற கொடிய நோய் பரவி வருகிறது. நேற்று ஒருவருக்கு 'நிபா' வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு ஆறாக உயர்ந்தது . அவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டனர். இதனால் கேரளா மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய அளவில் உயரிய மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனர் ராஜு பாகல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-


கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் தொடர்பு வைத்து இருந்ததால் தான் மற்றவர்களுக்கு நிபா வைரஸ் பரவியுள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகம். கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் இரண்டு சதவீதம் முதல் மூன்று சதவீதம் வரை மட்டுமே .ஆனால் நிபா வைரஸ் பாதிப்பில் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் ஆகும். நிபா வைரஸ் தாக்கியவர்களுக்கு மோனோகுளோனல் ஆன்டிபாடி என்ற மருந்து அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த மருந்து 14 பேருக்கு கொடுக்கப்பட்டது. அனைவரும் உயிர் பிழைத்து விட்டனர்.


கடந்த 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கிய போது ஆஸ்திரேலியாவில் இருந்து மோனோ குளோனல் ஆன்டிபாடி மருந்தை கொள்முதல் செய்திருந்தோம். தற்போது அந்த மருந்து பத்து நோயாளிகளுக்கு மட்டுமே போதுமான அளவு இருக்கிறது. இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆசிரியரிடம் இருந்து மேலும் 20 டோஸ் மருந்து கொள்முதல் செய்யப் போகிறோம். இதைத் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் மருந்தை கொடுக்கலாம். மருந்தை பயன்படுத்துவது பற்றி கேரள அரசு கூறியதாவது:-


நோயாளிகளின் குடும்பத்தினர் தான் முடிவு செய்ய வேண்டும். கேரளாவில் நிபா வைரஸ் பரவலுக்கு காரணம் தெரியவில்லை. 2018 ஆம் ஆண்டு அங்கு பரவியதற்கு வவ்வால்கள் தான் காரணம் என்று கண்டுபிடித்தோம். வவ்வாலிடமிருந்து மனிதர்களுக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை. இந்த தடவையும் காரணம் கண்டுபிடிக்க முயன்று வருகிறோம். மழை பருவத்தில்தான் இந்நோய் பரவுகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News