Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த தலைமுறையினருக்கு கடன் சுமை இல்லாமல் அமோகமாக ஆட்சி நடத்தும் மத்திய அரசு - நிர்மலா சீதாராமன்!

அடுத்த தலைமுறையினருக்கு கடன் சுமை இல்லாமல் மத்திய அரசு வெற்றிகரமாக ஆட்சி செய்து வருவதாக மதிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அடுத்த தலைமுறையினருக்கு கடன் சுமை இல்லாமல் அமோகமாக ஆட்சி நடத்தும் மத்திய அரசு - நிர்மலா சீதாராமன்!

KarthigaBy : Karthiga

  |  21 Oct 2023 7:30 AM GMT

பொருளாதாரம் மாநாடு 2023 புது டில்லியில் நடந்தது. மாநாட்டில் பேசிய மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-


நாட்டின் முக்கிய பொருளாதாரம், உறுதித் தன்மை மற்றும் நிதி நிர்வாகத்தை கையாளும் பொறுப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்.இந்திய அரசின் கடனை நாங்கள் உணர்ந்துள்ளோம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது அது அவ்வளவு உயர்ந்ததாக இருக்காது. இருந்தாலும் கூட உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனைகளை நாம் உணர்வு பூர்வமாக அணுகி கடந்துள்ளோம்.சில வளரும் நாடுகளின் கடன் தொடர்பான தரவுகளையும் அவை எவ்வாறு அவற்றை நிர்வகிக்கின்றன என்பதையும் அரசாங்கம் தீவிரமாக கவனிக்கிறது.


கடன் சுமையை பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது. இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மிகச் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் வரவிருக்கும் தலைமுறையினர் கடன் சுமையை உணராத வகையில் பொறுப்புணர்வுடன் அதை கையாளுகிறேன் . கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பதை விட ஒவ்வொரு ரூபாய்க்கும் சிறந்த வருமானம் கிடைக்கும் வகையில் பொது உள்கட்டமைப்பு உருவாக்குவதில் அரசாங்கம் பணத்தை செலவிட்டது. இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தில் வெளிப்படை தன்மையுடன் உள்ளது.


குடிமக்களை மேம்படுத்துவதற்கு டிஜிட்டல் மயமாக்கலை விட சக்தி வாய்ந்த கருவி எதுவுமில்லை . அது இல்லையெனில் மக்களின் வளர்ச்சிகளை பூர்த்தி செய்வதிலிருந்து நாம் வெகு தொலைவில் இருப்போம். ஜன்தன் கணக்குகள் நாட்டிற்கு நிதி சேர்க்கை கொண்டு வருவதற்கான மிகப்பெரிய கருவியாகும் . ஆனால் 2014ல் இதை தொடங்கிய போது பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவை ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாக இருக்கும்.பொதுத்துறை வங்கிகளுக்கு சுமையாக மாறும் என்றனர். இன்று இந்த ஜன்தன் கணக்குகளில் ரூபாய் 2 லட்சம் கோடிக்கு மேல் இருப்பு தொகை உள்ளது காரணமாக மக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்திலிருந்து இந்த கணக்குகளில் பணத்தை பெற்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News