நிதி பகிர்வில் ஓரவஞ்சனை என்று குற்றம் சுமத்திய காங்கிரஸ் மக்களவை குழு தலைவருக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!
பாஜக அல்லாத மாநிலங்களில் நிதி பகிர்வில் ஓரவஞ்சனை செய்வதாக குற்றம் சுமத்திய காங்கிரஸ் மக்களவை குழு தலைவருக்கு நீதிமன்ற நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
By : Karthiga
நிதி பகிர்வில் பாஜக அல்லாத மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை செய்யப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி நிதி அமைச்சர் மீது குற்றம் சாட்டினார். பாஜக எவ்வளவு தான் மக்களுக்காக நற்செயல்களை செய்து வந்தாலும் அனைத்து மாநிலங்களையும் சமமாக பாவித்து நிதி பங்கீடு செய்தாலும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒருவகையில் பழி சுமத்துவது வாடிக்கையாகத்தான் இருந்து வருகிறது. தற்போதும் அது தொடர்ந்து நிலையில் அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்
"ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல, நிதி குழு தான் என்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறியுள்ளார். நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதி குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன்.நிதி குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள். பிடித்த மாநிலம், பிடிக்காத மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை". இவ்வாறு பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் பதில் கூறியுள்ளார்.
SOURCE :NEWS