Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி சார்பில் விஜயகாந்த் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி- மனிதநேயமிக்க தலைவரை இழந்து விட்டோம் என உருக்கம்!

பிரதமர் நரேந்திர மோடி சார்பில் விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் மனிதநேயமிக்க தலைவரை இழந்து விட்டோம் என்று உருக்கமுடன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி சார்பில் விஜயகாந்த் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி- மனிதநேயமிக்க தலைவரை இழந்து விட்டோம் என உருக்கம்!

KarthigaBy : Karthiga

  |  30 Dec 2023 3:30 AM GMT

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நேற்று முன்தினம் அவரது கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று அதிகாலை அவரது உடல் தீவு திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில். பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மத்திய நிதி மந்திர நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு நேற்று மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்த் உடல் அருகில் சோகத்துடன் நின்று கொண்டிருந்த அவரது மனைவி பிரேமலதாவின் கைகளை பிடித்த ஆறுதல் கூறினார்.


அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் கே அண்ணாமலை முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜர் உட்பட நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள். இதன் பிறகு விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிதிமந்திரி நிர்மலா சீதாராம நிருபர்களிடம் கூறியதாவது :-


கேப்டன் விஜயகாந்த் மரணம் அடைந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் பதிவு வெளியிட்டார். உடனடியாக மத்திய அரசின் சார்பில் நீங்கள் செல்ல வேண்டும். விஜயகாந்தின் குடும்பம் தேமுதிக தொண்டர்களை சந்திக்க வேண்டும். இந்த துக்கத்தில் நாமும் பங்கேற்க வேண்டும் என்று தெளிவான அறிவுரை வழங்கி அனுப்பினார். நான் பிரதமர் நரேந்திர மோடி சார்பில் விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் சமர்ப்பித்தேன்


விஜயகாந்த் மக்களுக்காக பாடுபட்டார். அவர் வீட்டுக்கு வந்த ஒருவரை கூட சாப்பிடாமல் அனுப்பியதில்லை. அவருடைய மனம் மிகவும் இளகியது. நான் அவருடைய பேட்டியை பலமுறை பார்த்திருக்கிறேன். அவரது பேட்டி ஒன்றில் 'என்னுடன் வேலை பார்க்கும் எல்லோருக்கும் எனக்கு கிடைக்கிற வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வழிமுறையை ஆரம்பித்தேன். நான் சாப்பிடுவதைத் தான் அவர்கள் சாப்பிடுவார்கள் அவர்கள் சாப்பிடுவது தான் நான் சாப்பிடுவேன் இதில் பாகுபாடு வேறுபாடு ஒன்றும் இருக்காது' என்று தெளிவாக எடுத்துச் சொன்னார் விஜயகாந்த்.


அதனால் புதிய வழக்கம் உருவாகி இருக்கிறது . உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களுக்கு ஒரு விதமான சாப்பாடு , வேலை பார்க்கிறவர்களுக்கு வேறு விதமான சாப்பாடு என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரும் மனிதர்கள் தான். அவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து மரியாதை கொடுக்க வேண்டும் என்ற மனிதநேயத்துடன் இருந்த அரசியல்வாதி விஜயகாந்த். அரசியலில் தினமும் மனிதநேயத்தை கடைபிடிக்கும் தலைவரை பார்க்க முடியாது. அந்த மாதிரி குணம் படைத்த கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை.


இந்த துக்கத்தை எடுத்துச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. தேமுதிக தொண்டர்கள் மனதில் இருக்கும் துக்கம் எங்கள் மனதிலும் இருக்கிறது . அதனால் தான் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த எனக்கு பிரதமர் உத்தரவிட்டார். தன்னுடைய பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை இன்றைக்கு இழந்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News