Kathir News
Begin typing your search above and press return to search.

மின்னல் வேகத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி- நிதின் கட்கரி பெருமிதம் !

மைசூரு மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை தற்போதைய மூன்று மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மின்னல் வேகத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணி- நிதின் கட்கரி பெருமிதம் !
X

ShivaBy : Shiva

  |  13 Aug 2021 5:45 AM IST

மைசூர் மற்றும் பெங்களூருவுக்கு இடையிலான 10 வழி விரைவுச் சாலை அக்டோபர் 2022க்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


பொருளாதார வழித்தடமான மைசூர் மற்றும் பெங்களூரு இடையிலான 10 வழி விரைவுச்சாலையை விரைந்து முடித்து சாதனை செய்ய இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ₹ 8,172 கோடி செலவில் தயாராகும் இந்த விரைவுச்சாலை, மைசூரு மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை தற்போதைய மூன்று மணி நேரத்திலிருந்து 90 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் "10 வழிச்சாலை பெங்களூரு-மைசூரு பொருளாதார வழித்தடத்தை விரைந்து முடித்து சாதனை படைக்கும் என்றும் அக்டோபர் 2022க்குள் ₹ 8172 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த பொருளாதார வழித்தடம் நிறைவடையும்" என்று நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் இந்தத் திட்டம் குறித்த நேரத்திற்குள் முடிவடையுமா என்ற சந்தேகத்துக்கு பதில் அளிக்கும் விதமாக நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று நோயின் இரண்டாவது அலையின் போது பல தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டதாலும் சக ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதாலும் சாலை அமைக்கும் பணி தடைபட்டது. இருப்பினும் இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியவுடன் பணிகள் மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

118 கிமீ நீளமுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 8,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஆறு வழி நெடுஞ்சாலை மற்றும் இருபுறமும் இருவழி சேவை சாலையை உள்ளடக்கியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கப்பட்டணம், மாண்டியா, மாத்தூர், சன்னபட்னா, ராமநகரம் மற்றும் பிடதி ஆகிய இடங்களில் பை-பாஸ் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.


Source : The ஹிந்து

Image courtesy : The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News