பிராணாயமத்திலே இத்தனை வகை உண்டா? அதன் பயன்கள் என்னென்னNo? இத படிங்க!
பிராணாயமத்திலே இத்தனை வகை உண்டா? அதன் பயன்கள் என்னென்னNo? இத படிங்க!

பிராணாயாமம் ஒரு யோக வழிமுறையாகும். சமஸ்க்ரிதத்தில் "பிராணன்" "யாமம்" என்று பிரிக்கப்படுகிறது, பிராணனை ஒழுங்கு படுத்துதல் என்று இதற்கு பொருள். நாம் உள்வாங்கி வெளிவிடும் மூச்சை விழிப்புணர்வோடு நெறிப்படுத்துவதே பிராணாயாமம் எனப்படும் இந்த வழிமுறையை இந்தியாவில் தான் முதன் முதலாக பின்பற்றப்பட்டது. "மூச்சை நம் விருப்பப்படி விடுவதும் வேண்டுமென்றால் நிறுத்திக்கொள்வோதுமான ஒரு யோக விழிப்புணர்வு நிலையை இந்த பிராணாயாமம் தருகிறது.
இது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பிராணாயாமம் தொடர்ச்சியாக செய்யப்படும்போது ஆஸ்துமா , ஒற்றை தலைவலி மன இறுக்கம், போன்றவற்றை சரி செய்கிறது. இதை சமீபத்திய ஆராய்ச்சிகள் உறுதி படுத்தி உள்ளன. ப்ராணாயாமங்கள் எட்டு வகைப்படும், எல்லாவற்றையும் முழுவதுமாக செய்து முடிக்க 45 நிமிடங்கள் ஆகும்.
1. உஜ்ஜை பிராணாயாமா
மூச்சு விடும்போது தொண்டையில் இருந்து சப்தம் எழுப்புவது போன்ற இந்த பயிற்சி ரத்த அழுத்தத்தை குறிக்கிறது, காது மூக்கு மற்றும் தொண்டையில் இருக்கிற குறைபாட்டை நீக்குகிறது
2. அனுலோமா விலோம பிராணாயாமம்
நாடி சுத்தி எனும் பயிற்சி முறை அனுலோமா விலோம பிராணாயாமம் எனப்படுகிறது, இதில் மூச்சை இழுத்து விடுவதோடு தொடர்ந்துகொன்டேயிருக்கும் மூச்சை நிறுத்துவது யில்லை.
3. கபாலபதி
நுரையீரலில் இருந்து காற்றை வெளியேற்றி பிறகு இயல்பாக மூச்சு வாங்குவது கபாலபதி எனப்படும், இது தியானத்தின் போது மனம் ஒரு நிலைப்பாட உதவும். வயிற்று பகுதியில் தேவையற்ற கொழுப்புகள் கரையும். மனம் இலகுவாகும்
4.அக்னிசார பிராணாயாம
இந்த முறை ப்ராணாயாமத்தின்போது மூச்சி வெளியே விடும்நிலையில் வயிற்றுப்பகுதி உள்லே பலமாக அழுத்தி இருக்கும். இதனால் ஜீரண மண்டலங்கள் வலுப்பெற்று குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதாக தீரும்
5. ப்ராமரி பிராணாயாம
ஒரு நாசியின் வழியே மட்டும் மூச்சை வெளியேற்றும் பயிற்சி இந்த பயிற்சி மூன்று தோஷங்களையும் குணப்படுத்தும். இது மனதிற்கு உற்சாகத்தியும் தெளிவையும் தரக்கூடியது. பேச்சு தெளிவாக தடையின்று வருவதற்கு இந்த பிராணாயாமம் உதவும்
6. சூர்யா பந்தன
இந்த பிரணாயாமம் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். பித்த தோஷத்தை சமன் செய்து கபத்தை குணப்படுத்தும்.
7. பஸ்திரிக பிராணாயாமம்
இது உடல் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை புத்துணர்ச்சி அடைய செய்யும். இந்த பிராணாயாமம் உடலுக்கும் ஒரு மணி நேரும் உடற்பயிற்சி செய்யும் பலனை தருகிறது.
8. சந்திர, சூர்ய பஸ்திரிக
இடம் மற்றும் வலது நாசியில் மட்டும் பஸ்திரிக பயிற்சியை செய்வது. இடது நாசியில் செய்யும் போது இட நாடியையும் வலது நாசியில் செய்யும்போது பிங்களா நாடியையும் விழுப்புறச்செய்கிறது. ஆன்மீக பத்தியில் இருப்பவர்களுக்கு இது பயனளிக்கும்