Kathir News
Begin typing your search above and press return to search.

எந்த தொழிலதிபருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை - நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது :-

எந்த தொழிலதிபருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை - நிர்மலா சீதாராமன்!
X

KarthigaBy : Karthiga

  |  2 Jun 2024 2:20 PM GMT

யுபிஐ ஆட்சி காலத்தில் ஸ்டாட்ர்ட்அப் மற்றும் சிறு தொழில்களை விரிவுபடுத்த விரும்பும் கோடிக்கணக்கான இந்தியர்களின் கடன் தேவைகளும் கனவுகளும் முடக்கப்பட்டன. இதற்கு வங்கிகளில் காணப்பட்ட நிதி நிர்வாக குளறுபடிகளே முக்கிய காரணமாக இருந்தது. மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கடந்த 2015-ல் பெரிய மதிப்பில் ஆன வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டு விசாரணைக்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. திவால் நிலை குறியீடு உருவாக்கப்பட்டது .தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக 2018-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது .ரூபாய் 250 கோடிக்கு மேல் உள்ள கடன்களை திறம்பட கண்காணிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு முகமைகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் எதிர்கட்சிகள் எப்போதும் போல் பொய்களை பரப்புவதையே வழக்கமான பணியாக செய்து வருகின்றன .2014 மற்றும் 2023 க்கு இடையில் எந்த ஒரு தொழிலதிபருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அமலாக்கத்துறை 1,105 மோசடி வழக்குகளை விசாரித்து அதன் விளைவாக ரூபாய் 64,920 கோடியை பறிமுதல் செய்துள்ளது. டிசம்பர் 2023 நிலவரப்படி ரூபாய் 15,183 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அரசு வங்கிகள் மீட்டெடுத்து உள்ளன.

வாரா கடன் பிரச்சனைக்கு காங்கிரஸ் காலத்தில் தான் விதை தூவப்பட்டது. அப்போது அரசியல்வாதிகளுக்கு சாதகமாக வங்கியின் தலைமை நிர்வாகிகள் நடந்து கொண்டுள்ளனர். பொதுத் துறை வங்கிகள் 2023-24 ல் 4 மடங்கு அதிகமாக அதாவது ரூபாய் 1.41 லட்சம் கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளன . இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News