வரதட்சணையாக கார் தரவில்லையாம்! திருமணமான ஒரு மணி நேரத்தில்"முத்தலாக்"!!
வரதட்சணையாக கார் தரவில்லையாம்! திருமணமான ஒரு மணி நேரத்தில்"முத்தலாக்"!!
By : Kathir Webdesk
ராஜஸ்தானின் தோல்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் நதீம் என்ற பப்பன் (27). இவர் ஷூ ஷோரூம் ஒன்றில் காசாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கும் ஆக்ராவின் ஹரிபர்வத் பகுதியை சேர்ந்த ரூபி (26) என்ற பெண்ணிற்கும் ஆகஸ்ட்-15 அன்று திருமணம்நடைபெற்றது.
ரூபி, பல் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். 7 பேருடன் பிறந்த ரூபி, வீட்டில் 3 வது பிள்ளை.
திருமணத்தின் போது ரூபியின் வீட்டாரிடம் வரதட்சணையாக கார் வேண்டும் என நதீம் கேட்டுள்ளார். கார் தராததால், திருமணம்முடிந்த ஒரு மணி நேரத்தில், மவுலவி முன்னிலையில் மூன்று முறை "தலாக்" கூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தங்களின்பெண்ணை ஏற்றுக் கொள்ளும்படி ரூபியின் வீட்டார் கெஞ்சியும் அவர் மனம் இரங்கவில்லை. இதனால் ரூபியை தங்களின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து ரூபியின் வீட்டினர் நதீமின் குடும்பத்தினரிடம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அவர்களை மாப்பிள்ளை வீட்டார் கற்களை வீசி தாக்கி விரட்டி உள்ளனர்.
இதனால் ரூபியின் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நதீம் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.