Kathir News
Begin typing your search above and press return to search.

ஐகோர்ட்டுகளின் பெயரில் மாற்றம் இல்லை : மத்திய அரசு

ஐகோர்ட்டுகளின் பெயரில் மாற்றம் எதுவும் செய்யப்பட போவதில்லை என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

ஐகோர்ட்டுகளின் பெயரில் மாற்றம் இல்லை : மத்திய அரசு
X

KarthigaBy : Karthiga

  |  4 Aug 2023 11:15 AM GMT

நாட்டின் தலைநகரங்களின் பெயர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டுள்ளன. எனவே அந்த பகுதிகளில் இயங்கி வரும் ஐகோர்ட்டுகளின் பெயரையும் புதிய பெயரில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த வகையில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் என்ற பெயர்களில் இயங்கி வரும் ஹை கோர்ட்டுகளை அந்தந்த நகரங்களின் தற்போதைய பெயரான மும்பை, கொல்கத்தா , சென்னை ஹைகோர்ட்டுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


எனவே இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஐகோர்ட்டுகள் மசோதா 2016 என்ற பெயரில் மசோதா கொண்டுவரப்பட்டது. இதில் வேறு சில ஐகோர்ட்டுகளின் பெயரும் மாற்றும் வகையில் விதிகள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக ஒடிசா என்பது ஒடிசாவாகவும் கௌஹாத்தி என்பது குவகாத்தியாகவும் திருத்துவதற்கு வழிமுறைகள் சேர்க்கப்பட்டன. ஆனா இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகின. குறிப்பாக பெயரை மாற்றுவதற்கு சில ஐகோர்ட்டுகள் விரும்பவில்லை. குறிப்பாக தமிழ்நாடு ஹைகோர்ட் என பெயர் மாற்றமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் ஹைகோர்ட் அதிருப்தி தெரிவித்தது.


இதைப் போல கல்கத்தா கொல்கத்தா ஹைகோர்ட் என மாற்றுவதற்கு அந்த மாநில அரசும் ஹைகோர்ட்டும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த பெயர் மாற்ற நடைமுறையை அரசு முன்னெடுத்துச் செல்லவில்லை. அந்த மசோதா நாடாளுமன்றத்திலேயே முடங்கியது. இந்த நிலையில் மேற்படி ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றும் திட்டம் எதுவும் மீண்டும் அரசிடம் உள்ளதா என நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பபி இருந்தனர். இதற்கு சட்டமந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது


பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ் ஹைகோர்ட் களின் பெயர்களை முறையே மும்பை கொல்கத்தா மற்றும் சென்னை கோர்ட்டுகளாக மாற்றுவது தொடர்பாக ஹைகோர்ட்டுகள் மசோதா 2016 என்ற பெயரில் 2016 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மக்களவையில் ஒரு மசோதாவை அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த நடவடிக்கை தொடர்பாக எழுந்த மாறுபட்ட கருத்துக்களுக்கு மத்தியில் 16- வது மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதாவை மேலும் எடுத்துச் செல்ல முடியவில்லை. தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் மசோதா எதுவும் கொண்டுவரும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. இவ்வாறு அர்ஜுன் ராம் தெரிவித்தார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News